Thursday, May 15, 2008
ஜோடி - புகைப்படப் போட்டிக்கு

மே மாதப் புகைப்படப் போட்டிக்காக - திருவனந்தபுரம் பத்மனாபபுரம் அரண்மனைக்குப் போயிருந்த போது எடுத்தது.

வகை : புகைப்படம்
என்னுடைய புகைப்பட வலைப்பதிவை ஆரம்பித்து சுமார் மூன்று மாதங்களாகின்றன. இது வரையிலும் வெள்ளை நிற வண்ணப் பிண்ணனியில் வலைப்பதிவு இருந்தது. பார்க்க நன்றாக இருந்தாலும், எதோ ஒன்று குறைவது போன்று தோன்றியது. அதுவுமில்லாமல், நான் இணையத்தில் பார்த்த பெரும்பாலான புகைப்பட வலைப்பதிவுகள், கரு்நிற வண்ணப் பிண்ணனிகளில் இருந்தன. சரி, நமது பதிவின் தோற்றத்தினையும் மாற்றலாம் என்று, இணையத்தில் தேடி எடு்த்து தற்போது இந்த வடிவத்தினை தேர்வு செய்தேன். எப்படி?
வகை : ஆட்டோகிராப், இணையதளம்
உபயோகமற்ற தகவல் #1 : இங்கன, போன சனிக்கிழமை குருவி படம் வெளியான தியேட்டர்ல இந்த வாரம் போய்ப் பார்த்தா ‘யாரடி நீ மோகினி' ஓட்டிட்டிருக்காங்க. குருவி எப்ப தியேட்டர விட்டு பறந்ததுன்னு தெர்ல.
உபயோகமற்ற தகவல் #2 : 'குருவி' பட போஸ்டர்ல இருக்கிற விளம்பர வாசகம் “Tight your Grip.. or He will blow you out" - படத்தப் பாத்துட்டு வந்த ரசிககண்மனிகளின் கமெண்ட் “தியேட்டர்ல உக்கார முடியலப்பா.. எப்படா வெளிய ஓடலாம்னு இருந்தது” - ஒரு வேள இதத்தான் ஆங்கிலத்துல ஸ்டைலா விளம்பரபடுத்துறாங்களோ!!
உபயோகமற்ற தகவல் #3 : ‘குருவி' படத்தப் பாத்துட்டு வந்து என்னுடைய அலுவலக நண்பர் ஒருத்தர் எழுதுன விமர்சனம் “ நல்ல கருத்துள்ள படம் - குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்!” (அவர் விஜய்யோட தீவிர ரசிகர்ங்கிற விஷயம் இங்க குறிப்பிடக் கூடாதது!!)
வகை : திரைப்பார்வை, நகைச்சுவை

சமீபத்தில் சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு திரும்பும் வழியில் பயணத் துணையாக இருக்கட்டுமே என்று இரண்டு புத்தகங்களை வாங்கினேன். ஒன்று மதன் எழுதிய ”வந்தார்கள் வென்றார்கள்”. அந்தப் புத்தகத்தை பயண வழியிலேயே படித்து முடித்து விட்டேன். இன்னொரு புத்தகம் “தனது பொக்கிஷத்தை விற்ற துறவி” (The Monk who sold his Ferrari) - ராபின் ஷர்மா ஆங்கிலத்தில் எழுதி தமிழாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கும் புத்தகம். அரை மனதுடன்தான் வாங்கினேன். ஏனென்றால் இந்த சுயமுன்னேற்ற புத்தகங்கள் எனக்கு கொஞ்சம் அலர்ஜி. ஆனாலும் நண்பரின் தீவிரப் பரிந்துரையால், படித்துத்தான் பார்ப்போமே என்று வாங்கினேன்.
வாங்கி இரண்டு வாரங்களாக அட்டைக் கூட பிரிக்கப்படாமல் கிடந்தது. கல்லூரியில் படிக்கும் போது, வழக்கமாக கல்லூரிப் பாடப் புத்தகங்களுக்குத்தான் இந்த நிலை ஏற்படுவதுண்டு. ”புத்தகத்துக்காக கொடுத்தப் பணத்தை வீணாக்குவானேன்! முன்னுரைப் படிக்க ஆரம்பிக்கலாம், பிடித்திருந்தால், தூக்கம் வராதிருந்தால்,தொடரலாம்” என்று இரண்டு நாட்களுக்கு முன்தான் படிக்கத் தொடங்கினேன். அது இன்று புத்தகத்தைப் பற்றி பதிவு போடுமளவுக்கு கொண்டு
வந்து விட்டது! :-)
கல்லூரிக் காலங்களில், எதிர்காலப் பயத்தினால், சில சுயமுன்னேற்றப் புத்தகங்களை வாசித்ததுண்டு. ஆனால் அவை எல்லாம் பதிப்பகங்களும், எழுத்தாளர்களும்தான் வேறே தவிர, மற்றபடி ஒரே கருத்தைத்தான் சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் “தனது பொக்கிஷத்தை விற்ற துறவி” மற்ற புத்தகங்களைப் போலில்லாமல், சொல்லும் முறையில் வித்தியாசம் காட்டுகிறது. ஒரு கற்பனைக் கதையை எடுத்துக் கொண்டு, அதன் வாயிலாக கருத்துக்களைச் சொல்லுகிறது. இதனால் அலுக்காமல் தொடர்ந்து படிக்க முடிகிறது. புத்தகம் தமிழில் இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
இப்போதுதான் இரண்டு பகுதிகளை படித்து முடித்துள்ளேன். எப்படியும் இந்த வாரத்திற்குள் முழுவதும் படித்து விடுவேன் என்று நினைக்கிறேன். நீங்கள் யாரேனும் இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா? உங்களுடைய கருத்து/விமர்சனம் என்ன?
வகை : புத்தகங்கள்
இப்பல்லாம் தமிழ்ப் படங்கள் தமிழ்நாட்டுல வெளியிடப்படுற அதே நேரத்திலயே கேரளாவுலயும் வெளியிடுறாங்க. முந்தியெல்லாம் ஒரு 10,20 நாள் கழிச்சுத்தான் வெளியிடனும்னு உத்தரவு இருந்ததா கேள்வி. சரி அது எதுக்கு நமக்கு, நாம படத்துக்கு வரலாம். “குருவி" (Kuruvi) இங்க திருவனந்தபுரத்தில வெளியீடு, தமிழ்நாட்டுல வெளியிடப்பட்ட நாள் அன்னிக்கே! கேரளாவுல தமிழ்ப் படங்களுக்கு, அதுவும் விஜய் படத்துக்கு, கூட்டமெல்லாம் இருக்காதுன்னு நெனச்சுட்டு போனா, தியேட்டர்ல திருவிழா கூட்டம். முதல் காட்சிக்கு நோ டிக்கெட். இரண்டாவது காட்சிக்குத்தான் கிடைச்சுது - திரைக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப பக்கத்துல. அன்னாந்துதான் பாக்க வேண்டியிருந்தது.
கதை என்னான்னா?
வில்லன்கள்கிட்ட அடிமையா மாட்டிட்டு இருக்குற தன்னோட அப்பாவையும், மத்த ஜனங்களயும் விஜய் காப்பாத்தறதுதான் ஒரு வரிக் கதைச் சுருக்கம். விரிவா கதைய தெரிஞ்சக்கனும்னா மனசாட்சி: சுவாரஸ்யம் இல்லாத "குருவி" - திரை விமர்சனம் இல்ல தியேட்டருக்கு போய்ப் பாருங்க! :-)
வகை : திரைப்பார்வை

இடது பக்கம் இருக்குற பூமியின் படம் 1970ல TIROS-1 விண்கலத்துனால எடுக்கப்பட்டது. வலது பக்கம் இருக்குற பூமியின் படம் சமீபத்துல 1996ல டிஸ்கவரி விண்கலத்துனால எடுக்கப்பட்டது. படத்த பார்த்தாலே தெரியுது நாம எவ்வளவு தூரம் தொழில்நுட்பத்துல முன்னேறியிருக்கோம்னு!!
இங்கருந்து சுட்டது
வகை : இணையதளம்
திடீர் ஹீரோ(!)வாயிட்ட ஸ்ரீசாந்த்தப் பத்தி இந்த பத்திக்கிற சீசன்ல பதிவு போடலனா எப்படி!? நம்ம ஹீரோவோட அழுவாச்சி காவிய வீடியோ!!!





வகை : நகைச்சுவை, விளையாட்டு
பதிவப் பத்தி சின்ன விளக்கம்.. 15 கேள்விகள் இருக்கு.. உங்களோட Music Player-ல Shuffle Mode-அ ஆன் பண்ணிட்டு, கேள்விகளப் படிங்க. முதல் கேள்விக்கு நீங்க என்ன பாட்டு கேட்டுட்டு இருக்கீங்களோ அத எழுதுங்க.. அடுத்த கேள்விக்கு Next press பண்ணிட்டு என்ன பாட்டு வருதோ அத எழுதுங்க. அவ்ளவுதான்!
{ கேள்விகள், எனக்கு வந்த பாடல்கள், [என்னுடைய கருத்து] }
1.IF SOMEONE SAYS “IS THIS OKAY?” YOU SAY?
"வாடா, வாடா, வாடா தோழா!!!
வாழ்ந்து பாப்போம் வாழ்ந்து பாப்போம் வாடா!!!” - சிவகாசி (இயக்கம் : தி கிரேட் பேரரசு)
[கேள்வி கேட்டவரு, திரும்ப என் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டாருன்னு நெனக்கிறேன்!]
2.WHAT WOULD BEST DESCRIBE YOUR PERSONALITY?
“பூவே வாய் பேசும் போது
காற்றே ஓடாதே நில்லு” - 12B
[ஒண்ணும் சொல்லுறதுக்கில்ல]
3.WHAT DO YOU LIKE IN A GUY/GIRL?
”நெஞ்சம் என்னும் ஊரினிலே
காதல் என்னும் தெருவினிலே”- ஆறு
[வோனாம், அப்படிப் பாக்காதீங்க!!]
4.HOW DO YOU FEEL TODAY?
”இளங்காத்து வீசுதே
எச போல பேசுதே” - பிதாமகன்
[”எலே... யாருடா அது AC ஓடுறப்ப Fan-அயும் போட்டுக்கிட்டு இருக்குறது.. “ - colleague கத்துறாருங்க ]
5.WHAT IS YOUR LIFE’S PURPOSE?
”ஆசை நூறு வகை
வாழ்வில் நூறு சுவை, வா” - ?
[ஆஹா, இதுவல்லவோ வாழ்க்கையின் உயர்ந்த தத்துவம்!]
6.WHAT IS YOUR MOTTO?
”இப்படித் துக்கிரித்தனமா பேசிக்கிட்டு இருந்தா
துன்ற சோத்துக்கு தாளம்தான் போடணும்” - ?
[கரெக்டுதான்.. பாட்டும் படமும் என்னன்னு சொல்லுங்க பாக்கலாம்!]
7.WHAT DO YOUR FRIENDS THINK OF YOU?
”வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து ஒரசுற வரையில” - தல படம்
[சரியாத்தான் இருக்கு! அதுக்குன்னு, யாரும் வந்து பத்த வச்சிடாதீங்கப்பா!!]
8.WHAT DO YOU THINK OF YOUR PARENTS?
“மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து “ - ஷாஜகான்
[ஒண்ணும் சொல்லுறதுக்கில்ல]
9.WHAT DO YOU THINK ABOUT VERY OFTEN?
”டைலாமோ டைலாமொ.. காலைக்கு ராத்திரி மேல காதலே” - டிஷ்யூம்
[முடியல.. புரியல.. பாட்டு வரி கரெக்டா?]
10.WHAT DO YOU THINK OF YOUR BEST FRIEND?
”அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது” - ராஜபார்வை
[ டாஸ்மாக் போய்ட்டு வந்தா இப்படித்தான்!]
11.WHAT DO YOU THINK OF THE PERSON YOU LIKE?
”ஈஸ்வரி உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்” - ஃபைவ் ஸ்டார்
[எனக்கு, ஈஸ்வரின்னு யாரயும் தெரியாது..தெரியாது..தெரியாது!!]
12.WHAT IS YOUR LIFE STORY?
”இரவா பகலா குளிரா வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி” - ?
[அப்படியா?]
13.WHAT DO YOU WANT TO BE WHEN YOU GROW UP?
”அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே” - ?
[சொர்க்கமே என்றாலும், நம்மூரைப் போல் வருமா... விசாவை முதல்ல கேன்சல் பண்ணனும்!]
14.WHAT DO YOUR PARENTS THINK OF YOU?
”New.. இது வரை 1'O clock 2'O clock
New ..இனி அது 3'0 clock 4'0 clock" - New
[ஹா.ஹா.ஹா.. இரவுப் பறவை நாங்கள்ளாம்!]
15.WHAT IS YOUR BIGGEST SECRET?
“காதல் வந்தால் சொல்லியணுப்பு.
உயிரோடிருந்தால் வருகிறேன்” - இயற்கை
[ :-| ]
வகை : நகைச்சுவை
கடந்த வாரம் சென்னைக்குச் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து மீண்டும் சென்னைப் பயணம். கேரளப் புது வருடப் பிறப்பிற்காக கிடைத்திருந்த மூன்று நாட்கள் விடுமுறையில், சென்னை செல்லலாம் என்று வெள்ளி மதியம் முடிவெடுத்து, வெள்ளி அன்றே மாலை 5 மணிக்கு கிளம்பினேன். கடைசி நேர முடிவானதால் பயண முன்பதிவு எதுவும் செய்யவில்லை. பேருந்து கிடைக்கும், பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்து விட்டேன்.
வழக்கம் போல செல்லும் பாதையில் போகாமல்(நாகர்கோவில்-மதுரை வழி), ஒரு மாறுதலுக்கு கேரளா வழியாக செல்லலாம் என நினைத்து, பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன். சில நிமிடங்கள் கழித்து கொல்லம் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று வந்தது. பாகிஸ்தான் எல்லைக்கு உள்ளேயே எளிதாக போய் விடலாம் போல, அந்த அரசுப் பேருந்தினுள் செல்வது அவ்வளவு எளிதாக இல்லை. அந்தளவுக்க கண் வைக்க முடியாத அளவுக்கு கூட்டம். வார இறுதியாதலால், சேட்டன்களும், சேச்சிகளும் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்தப் பேருந்து சென்றது. அடுத்து வந்த பேருந்தோ, முதல் பேருந்தே பரவாயில்லை என்று நினைக்குமளவுக்கு மக்களாலும், டிராவல் பேக்குகளாலும் நிரம்பியிருந்தது! இது வேலைக்காகாது, நமக்கு தமிழ்நாடு வழிதான் சரி என முடிவெடுத்து, தம்பானூர் வந்து நாகர்கோவில் வண்டியைப் பிடித்தேன்.
மதுரை, திருச்சி வழியாக செல்வதென திட்டம். நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு நேரடிப் பேருந்து கிடைத்தது. இரவுப் பயணம். வீடியோவில் பழைய, விஜய் படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. பேருந்து பள்ளத்தில் குலுங்கும் போதெல்லாம் வீடியோ நின்று விட, நடத்துனர் வந்து ப்ளேயரை தட்டித் தட்டி படத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். தமிழ்நாடு சாலைகளில் பள்ளத்துக்கா பஞ்சம்!? ஆனாலும் நடத்துனர் கொஞ்சமும் சலிக்காமல் ஒவ்வொரு முறையும் வந்து ப்ளேயரை எழுப்பி விட்டார். கடைசியில் படத்தை ஓட்டியது வீடியோ ப்ளேயரா, இல்லை நடத்துனரா என்ற கேள்விக்கு பதில் தெரியாமலே, திருச்சியில் இறங்க வேண்டியதாய்ப் போயிற்று!
குட்டித் தகவல்:
திருச்சி செல்லும் வழியில் “சித்தார் வெஸ்ஸல்ஸ் (Cethar Vessels)" தொழிற்சாலையப் பார்க்க நேர்ந்தது. கட்டிடத்தைப் பார்த்தால் எதோ ஒரு மென்பொருள் நிறுவனத்தைப் போல, அவ்வளவு அருமையாக கட்டியிருக்கின்றனர். தமிழகத்தில், இந்த மாதிரியான கட்டிடங்களை, சென்னையத் தவிர்த்து வேறு எங்கேயும் பார்த்திராத நான், இதைப் பார்த்தவுடன் என் எண்ணம் தவறு என்றறிந்தேன்!! திருச்சி நகரில் பெல் (BHEL) நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, நான் அறிந்த பெரிய தொழில் நிறுவனம். வேறு ஏதேனும் இருக்கிறதா?
வகை : ஆட்டோகிராப், பயணம்
முன் குறிப்பு: இது ”அறை எண் 305ல் கடவுள்” படத்தின் திரைவிமர்சனம் அல்ல. படத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையினரைப் பற்றிய கருத்துக்கள்/காட்சிகளுக்கு எனது கண்டனத்தை பதிவு செய்வதே இந்தப் பதிவின் நோக்கம்.
வாரக் கடைசி... இரண்டு நாட்கள் விடுமுறை... புதிய தமிழ்ப் படங்கள் வரவு.. கண்டிப்பாக திங்கட்கிழமை ஒரு விமர்சனம் எழுத விஷயம் ஏதாவது கிடைத்து விடும் என்றிருந்தேன். இதனால் திருவனந்தபுரத்தில் இருந்து மெனக்கெட்டு நாகர்கோவிலுக்கு பயணித்து “அறை எண் 305ல் கடவுள்” படத்துக்கு சென்றிருந்தேன். படத்தைப் பார்த்தப் பின், ”இதற்கா இவ்வளவு தூரம் வந்தேன்!?” என்றிருந்தது! விஷயம் அதுவல்ல... படத்தில் வரும் ஒரு காட்சி
படத்தின் கதைப்படி, தற்காலிக கடவுளர்களாகும் கதாநாயகர்கள் இருவரும், மென்பொருள் துறையில் பணி புரியும் நண்பனின் அலுவலகத்துக்கு செல்கின்றனர். நிறுவனத் தலைமை அதிகாரியின் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கொத்தவால்சாவடியிலிருந்து(!) எல்லாம் புரொஜெக்ட்கள் வருவதாகவும், நிறுவனம் நன்றாக போய்க் கொண்டிருப்பதாகவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இடைமறிக்கும் கதாநாயகன் alias கடவுள், சாதாரண நிலையில் இருக்கும் வாலிபனுக்கும், மென்பொருளாளனுக்கும் இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பற்றிக் கேள்விகள் கேட்க (கதாநாயகன் கடவுளாவதற்கு முன்பு தீவிரமாக வேலை தேடும் இளைஞன், BBA 52% தகுதிகளுடன்!), அதற்கு நிறுவனத் தலைவர் அளித்த பதிலில் திருப்தி அடையாமல், கதாநாயகன் ஒரு சொடக்கில் மென்பொருளாளர்கள் கை விரல்களை எல்லாம் காணாமல் போகச் செய்து விடுகிறார்! (கடவுளாயிற்றே!... கடவுளே!!!...) பின்னர் மென்பொருளாளர்கள் வேலை செய்ய முடியாதாம்!!
வகை : சமூகம், திரைப்பார்வை